காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாலையில் இது 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 54.91 அடியாகவும், நீர் இருப்பு 21,044 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4,834 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 54.82 அடியாகவும், நீர் இருப்பு 20,982 மில்லியன் கனஅடியாகவும் குறைந்தது. நீர்வரத்து விநாடிக்கு 2,826 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பதிவாகவில்லை.